இலங்கையில் வாழும் தமிழின மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறையானது, 2009 ஆம் ஆண்டு பாரிய யுத்தத்திற்குப் பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் பேரினவாதிகளின் பார்வையானது, இலங்கையில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம் மக்கள் மீது திரும்பியிருக்கிறது. பேரினவாதத்துக்குத் துணை போகும் இலங்கை அரசாங்கத்தாலும், பேரினவாதிகளாலும், அவர்களது இயக்கங்களாலும் 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலப்பகுதியில் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து இந் நூலில் இடம்பெற்றுள்ள ஆரம்பக் கட்டுரைகள் தெளிவுபடுத்தும்.

தொடர்ந்து வரும் நீண்ட கட்டுரையானது, 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கெதிராக இடம்பெற்ற இனக் கலவர வன்முறை குறித்த உண்மைச் சம்பவங்களையும், கள நிலவரங்களையும், புகைப்படங்களையும் கொண்ட முழுமையான ஆய்வுத் தொகுப்பாக அமைகிறது.

எம்.ரிஷான் ஷெரீப்

31.08.2014

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

கறுப்பு ஜூன் 2014 Copyright © 2015 by எம்.ரிஷான் ஷெரீப் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book